Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மற்றும் தென்காசியில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை…. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….!!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கனடியன் கால்வாய், மூலைக்கரைப்பட்டி, சேரன்மாதேவி, அம்பை, களக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Categories

Tech |