Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாநகரில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41(2) என்ற உத்தரவு திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே நேற்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

Categories

Tech |