தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு மார்ச் 4-ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இதற்கு பதிலாக மார்ச் 12-ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.