Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெல் அரவை செய்வதற்கு…. தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அவர் தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு நெல் அரவை செய்வதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி உரிய காலக் கெடுவுக்குள் நெல் அரவை செய்து கொடுக்க வேண்டும்.

இந்த பணியினை வேகமாகவும், தரமாகவும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிலையில் நெல் அரவைக்கு விண்ணப்பிக்கும் தனியார் உரிமையாளர்கள் அதற்கான மாதிரி விலை பட்டியல் மற்றும் உரிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் உரிமையாளர்களுக்கு  தமிழ்நாடு வாணிப கழகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

அதன்பிறகு நிரந்தர வேலை வாய்ப்பும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தனியார் ஆலை உரிமையாளர்கள் இணைவதன் மூலமாக மாவட்டத்தின் வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும் என ஆட்சியர் ஸ்ரீதர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், நெல் அரவை முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |