மின்னல் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கேசம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் மழை மேகம் சூழ்ந்த நேரத்தில் ராஜா நெல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.