Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் – நாளை அ.ம.மு.க. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவையாற்றில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

காவேரி டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாகவே மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்திலும் மிகுந்த இன்னல்களுக்கு இடையே பாடுபட்டு விளைவித்த நெல்லினை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பழனிசாமி அரசு செயல்பட வேண்டும் என ஏற்கனவே கழகத்தின் சார்பில் வலியுறுத்தி இருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். ஆனாலும் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மூடிமறைத்து பேட்டிகளை கொடுப்பதில்லையே முதல்வரும் உணவுத்துறை அமைச்சரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று டிடிவி தினகரன் விமர்சித்தார்.

Categories

Tech |