Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள்… விவசாயிகளுக்கு பயிற்சி… வேளாண்மை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!

வேளாண்மை துறையினரின் சார்பில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள மாரந்தை கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் தலைமையில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கபட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் செய்துள்ளார். இந்நிலையில் விவசாயத்திற்கு நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் இயற்கை உரங்களுடன் பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரங்களை பயன்படுத்தினால் பூச்சிகளின் தாக்குதல் இல்லாமல் அதிக மகசூல் பெறலாம் என்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சூடோமோனாஸ் விதை நேர்த்தி செய்யும் செயல்விளக்கத்தை வேளாண்மை அலுவலர் கிருத்திகா செய்து காண்பித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் கடலாடி வட்டாரத்தில் 7 ஊராட்சிகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தில் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்படும் எனவும் வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து நெல் பயிருக்கு காப்பீடு செய்யக்கூடிய விவசாயிகள் வருகின்ற 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |