நெல் வியாபாரி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தி அடுத்திருக்கும் அனந்தமங்கலம் சிவன் குளத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து திமுக பிரமுகரான ரமேஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்துள்ளனர். அதில் தெரியவந்தது, ரமேஷ் நெல்லை வாங்கி நெல் வியாபாரியான பட்டுராஜன் என்பவருக்கு விற்பனை செய்து வந்த நிலையில் பட்டுராஜ் ஒரு கோடியே 25 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் கூட்டாளிகள் இருவரை வரவழைத்து ரமேஷ் பட்டுராஜை கொலைசெய்து குளத்தில் வீசியதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் ரமேஷை கைது செய்துள்ளனர். மேலும் கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றார்கள்.