உலகின் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை பெரும் பணக்காரரான எலான் மஸ்க் இடம் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வதற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து டுவிட்டர் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர எலான் மஸ்க் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் எலான் மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து அடுத்தடுத்து டுவிட்டுகளை பதிவுசெய்து வருகிறார். அந்த அடிப்படையில் இன்று அதிகாலை மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பொது நம்பிக்கையை பெற டுவிட்டர் அரசியல் ரீதியில் நடுநிலையுடன் இருத்தல் வேண்டும்.
அப்பெடியெனில் தீவிர வலது சாரியையும், தீவிர இடது சாரியையும் எரிச்சலூட்டுதல் என அர்த்தம் என்று பதிவிட்டுள்ளார். அதன்பின் மஸ்க் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், “அடுத்து நான் கோகோ கோலாவை வாங்கி அதில் மீண்டும் கோகேனை (போதைப்பொருள்) போட இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு டுவிட்டில், “நான் இப்போது மெக்டொனால்ட்சை வாங்கி அங்குள்ள ஐஸ்கிரீம் இயந்திரங்களை சரி செய்யப்போகிறேன்.
அதனை தொடர்ந்து டுவிட்டரை அதிகபட்ச மகிழ்ச்சி தரும் இடமாக மாற்றுவோம்” என பதிவிட்டுள்ளார். பின் அடுத்தடுத்து டுவிட் செய்த எலான் மஸ்க் மெக்டொனால்ட்சை வாங்குவது குறித்து பதிவிட்ட டுவிட்டை நீக்கி அதன் ஸ்கீரின் ஷார்ட்டை மீண்டும் பதிவிட்டு கேளுங்கள், என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது என பதிவிட்டுள்ளார். டுவிட்டரை வாங்கும் நடவடிக்கையில் இறுதிக் கட்டத்திலுள்ள எலான் மஸ்க் அடுத்தடுத்து டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிகழ்வு உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது.