நேட்டோ, ஜி-7 போன்ற அமைப்புகளை தவிர்த்து உலகளாவிய புதியகூட்டணியை உருவாக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பியா உள்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென்சாகி அளித்த பேட்டியில் “சீனா மட்டுமல்லாது இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார போரில் பங்கேற்கவில்லை.
இது ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக கருதமுடியாது. ஜி-7, நேட்டோ அமைப்புகளுக்கு அப்பால் உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா பணிபுரிந்து , அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு நாடும் அவர்கள் எங்கு நிற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்ககைகளின் விளைவுகள், அந்நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் சரிவின் விளிம்பிற்கு எடுத்துச் செல்லும்.
எனினும் காலப்போக்கில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இந்த பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்ய வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை சீனா ரஷ்யாவிற்கு பொருளாதார உதவி வழங்க முடிவு செய்தாலோ அல்லது ரஷ்யாவிற்காக கூடுதல் சலுகைகளை வழங்கும் நடவடிக்கைகளை எடுத்தாலோ அது உலக பொருளாதாரத்தில் 15-20 % மட்டுமே இருக்க முடியும். அதற்கான எதிர்வினைகளையும் சீனா அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று அவர் கூறினார்.