Categories
உலக செய்திகள்

நேதாஜி படையில் பணியாற்றிய…. சுதந்திர போராட்ட வீரர்…. ஈஷ்வர் லால் சிங் மரணம்….!!

நேதாஜி படையில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி படையில் பணியாற்றியஈஷ்வர் லால் சிங் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர்  தான் ஈஷ்வர் லால் சிங். இவருக்கு வயது 92 ஆகிறது. இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவார். இவர் 1943-ல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, சுபாஷ் சந்திரபோஸ் உடன் உரையாடியவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் எய்தினார்.

இவருடைய நெருங்கிய உறவினரான மெல்விந்தர் சிங் இது குறித்து கூறியதாவது, “ஈஷ்வர் லால் சிங் மரணத்தை மிகுந்த வேதனையுடன் அறிவிக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். அங்குள்ள இந்திய தூதரகம், ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கடந்த 2019-ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். இந்திய தேசிய ராணுவத்தில் சிங்கப்பூர், மலேசியாவை சேரந்த முக்கிய இனக்குழுக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள்முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |