Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேதாஜி ரோட்டில் விதிகளை மீறி நிறைய வாகனங்கள் நிறுத்துவதால்… போக்குவரத்து நெருக்கடி… வாகன ஓட்டிகள் சிரமம்…!!!

நேதாஜி சாலையின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதான பகுதியில் நேதாஜி ரோடு இருக்கின்றது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்காக வடுகபாளையம் பிரிவில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது இதனால் மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதிகளில் இருந்து வரும் வண்டிகள் நேதாஜி சாலை வழியாக பாலக்காடு ரோட்டை அடைகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று வருகின்ற நிலையில் அங்குள்ள ஒரு ஒர்க்ஷாப் கடைக்கு வருகின்ற கிரேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வீதிகளில் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இருவழிபாதையில் ஆட்டோ போன்ற சிறிய வாகனம் தான் செல்ல வழி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியிருப்பதாவது, வடுகபாளையம் பிரிவில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வரும் போது லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஜமீன் ஊத்துக்குளி வழியாக சுற்றி பாலக்காடு ரோடு அடைந்தது. ஆனால் தற்போது பாலம் திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் நேதாஜி ரோடு வழியாக பாலக்காடு ரோட்டிற்கு எளிதாக வருகின்றது.

இந்நிலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் செல்லும் சாலையின் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் புதிதாக போடப்பட்ட இரு வழி சாலை பயன் இல்லாமல் இருக்கின்றது. மேலும் அந்த இடத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேதாஜி சாலையின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்த படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |