உலக நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் நான்காவது அலையில் நேபாள நாடு சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனாவிற்கு 1090 பேர் பாதிப்படைந்தும், இரண்டு பேர் உயிரிழந்தும் இருக்கின்றனர். 5000 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தெரியவில்லை. அந்த நாட்டின் மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்புகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது அதிகரித்து இருக்கின்றது.
இது பற்றி காத்மன்ட் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் 4 வது அலையை சுகாதார அதிகாரிகள் எதிர்கொண்டு வரும் சூழலில் கடந்த இரண்டு மாதங்களில் எச்1என்1 வகை வைரசால் கூடிய பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளும் காணப்படுகின்றது. இதுவரை 57 பேருக்கு தொற்றுகள் உறுதியாகியுள்ளது என கூறியுள்ளது. இதனை தொடர்ந்து நிபுணர்கள் இந்த தருணங்களில் தவறான சிகிச்சை மற்றும் அலட்சிய போக்கு அதிகரித்து காலதாமதம் சிகிச்சைக்கு வழிவகுத்து மரணங்கள் கூட ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அந்த நாட்டில் இரண்டு வகை பெருந்தொற்றுகள் ஏற்படக்கூடும் என பல்வேறு பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த பன்றி காய்ச்சலால் அந்த நாட்டின் பல மூத்த அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் கூட கடந்த காலங்களில் உயிரிழந்திருக்கின்றனர் என தொற்று நோய்க்கான மருத்துவமனையின் ஆராய்ச்சி பிரிவு தலைவரான மருத்துவர் ஷேர் பகதூர் புன் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் இதே காலகட்டத்தில் ஏஎச்3 வைரசால் ஏற்படும் ஹாங்காங் காய்ச்சலும் 55 பேருக்கு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் சர்வதேச இன்புளூயன்சா எச்சரிக்கை கூறியுள்ளது.