நேபாள நாட்டின் கண்டகி மாவட்டத்தில் போக்ரா நகரத்தின் ரங்கசாலா பகுதியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மர்ம மரணமடைந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆகாஷ் மரணமடைந்துள்ளார். 27 வயதான கைப்பந்து வீரர் ஆகாஷின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Categories