நேபாளத்தில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்திய அணியில் சேர்ந்த வீரர் இடம் பிடித்துத்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி அருகே இருக்கும் ஜலகண்டபுரத்தில் உள்ள தோரமங்கலம் கருணை நகர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் மணிவண்ணன். மாற்றுத்திறனாளியான இவர் ஈரோட்டில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். மேலும் அவர் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி பல பரிசுப் பொருட்களை பெற்ற இவர் வருகின்ற 10, 11, 12ஆம் தேதி நேபாளத்தில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக முதன்முதலாக இந்திய அணிக்கு மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.