நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் காவலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாள நாட்டில் அமைந்துள்ள தனுஷாதாம் மாவட்டத்தில் உள்ள மகேந்திரநகர் பஜார் என்னும் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஷா தனது வீட்டிற்கு முன்பு சந்தேகப்படும் வகையில் ஏதோ ஒரு பொருள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலை கேட்டதும் காவல் ஆய்வாளர் அமிர் குமார் அந்த இடத்திற்கு சென்றார். அவர் கீழே கிடந்த அந்த பொருளை கையில் எடுத்தார்.
அப்பொழுது, சந்தேகப்படும் வகையில் இருந்த அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியதில் அருகில் இருந்த ராஜேஷ் ஷா,அவரது மகன் ஆனந்த ஷா மற்றும் காவல் ஆய்வாளர் அமிர் குமார் தாஹல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த காவலர் உட்பட 3 நபர்களுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.