Categories
உலக செய்திகள்

நேபாளம் நிலச்சரிவில் 38 பேர் மாயம்…5 பேர் பலி…8 பேர் படுகாயம்…

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன 38 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால்  வாகன போக்குவரத்து முழுவதுமாக பாதிப்பு அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி உள்ளூர்வாசிகள் அனைவரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயமடைந்த நிலையில்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சம்பவ பகுதியை சேர்ந்த 38 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் பெய்துகொண்டிருக்கும்  தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை மாதம் இறுதியில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  67 பேர் காயமடைந்துள்ளனர். 38 பேரை காணவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |