நேபாள அதிபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேபாள நாட்டின் அதிபராக பித்யா பண்டாரி(61) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு திடீரென நேற்றைய தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது பற்றி அவரது செயலாளரான பேஸ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
அதனால் அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை இருக்கிறது. இதனால் அவர் காத்மண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திருபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.