நேபாளத்தில் நீண்ட நாட்களாகவே அரசியலில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து பதவியேற்ற எந்த ஒரு பிரதமரும் முழு பதவிக்காலம் வரை பணியாற்றவில்லை. நேற்று முன்தினம் 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. மேலும் 550 உறுப்பினர்களைக் கொண்ட 7 மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் 60% ஓட்டுகள் பதிவானதாக நேபாளத் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
பின்னர் வாக்குகளை என்னும் பணி உடனடியாக தொடங்கியுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்குமூலமாகவும், எஞ்சியுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அதேபோல் 550 சட்டசபை உறுப்பினர்களில் 320 பேர் நேரடி வாக்குமூலமாகவும், 220 பேர் விகிதாச்சார முறையிலும் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் 8-ம் தேதிக்குள் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி பெற்றுள்ளார்.