Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நேப்பியர் பாலத்தில் வரையப்பட்ட செஸ் ஓவியம்…. செல்பி எடுத்து மகிழும் வாகன ஓட்டிகள்…!!!

பாலத்தில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். இந்த போட்டியை முன்னிட்டு சென்னையில் முக்கிய பாலமாக இருக்கும் நேப்பியர் பாலத்தில் ஓவியமானது தீட்டப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் ஆனது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் செஸ் போர்டு போன்று வரையப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் பாலத்தை வந்து பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |