ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
Nee paadhi Naan paadhi kanne..
Yes, we heard you! #OhManapenne Coming Soon only on @DisneyPlusHS.@priya_Bshankar @KaarthikkSundar @Composer_Vishal @krishnanvasant @thespcinemas @ThirdEye_Films @thinkmusicindia #DisneyPlusHotstarMultiplex #OhManapenneOnHotstar pic.twitter.com/KhrW4yvxvn— Harish Kalyan (@iamharishkalyan) October 1, 2021
பெல்லி சூப்புலு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓ மணப்பெண்ணே திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.