Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் பரத்தின் ‘நடுவன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘நடுவன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பாய்ஸ், காதல், எம்.மகன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பரத். தற்போது இவர் திரில் கதையம்சம் கொண்ட ‘நடுவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷரங் இயக்கியுள்ள இந்த படத்தில் அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜார்ஜ், பாலா, கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பி, ஆராத்யா ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Naduvan Songs Download: Naduvan MP3 Tamil Songs Online Free on Gaana.com

இந்நிலையில் நடுவன் திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |