சமுத்திரகனி இயக்கி, நடித்துள்ள வினோதய சித்தம் படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் டான், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சமுத்திரகனி வினோதய சித்தம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, ஜெயப்பிரகாஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் வினோதய சித்தம் திரைப்படம் வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.