Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி விமர்சனம்

“நேரடியாக ரசிகனுக்கு அறிக்கை கூட வெளியிட முடியாதா?”… விஜய்யை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்…!!!

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் அறிக்கையை வெளியிட்டததால் கே.ராஜன் விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கே.ராஜனிடம் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஒரு ரசிகனுக்கு அறிக்கையை வெளியிட ஒரு ஆள் வேண்டுமா? நீ நேரடியாக அறிக்கை வெளியிட முடியாதா? ரசிகர்கள் உன் வீட்டு வேலைக்காரனா? என விளாசியுள்ளார். உச்சநட்சத்திரமான விஜய் அண்மையில் திருமண வரவேற்பு ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்குப் பிறகு ரசிகர்கள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது என ரசிகர் மன்ற செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

எம்ஜிஆர் கலைஞர் விஜயகாந்த் எல்லாம் வேலைக்காரனை விட்டா அறிக்கை வெளியிட்டார்கள்? விஜய் யாரோ ஒருவரை வைத்து அறிக்கை வெளியிடக் காரணம் பயம்.. பயத்தால் தான் என கூறியுள்ளார். விஜய் வருங்கால முதல்வர் என ரசிகர்கள் கூறுவது குறித்து ராஜனிடம் கேள்வி கேட்ட பொழுது முதல்வர் என்ற கனவெல்லாம் இருக்கா என பதில் கேள்வி எழுப்பினார். மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ரசிகர்கள் அவர்களின் பணத்தை போட்டு செய்கின்றார்கள். ரசிகர்கள் கடன் வாங்கி செலவு செய்வதனால் அவர்களுக்குத்தான் புண்ணியம் உங்களுக்கு இல்லை என விஜய்யை போட்டுத்தாக்கியுள்ளார் கே.ராஜன்.

Categories

Tech |