தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 என்ற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றுகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் நான்காவது நாளின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இதில் பாத்திரம் கழுவும் அணியின் தலைவர் ஜனனி தன்னுடைய அணியில் இருந்து ஒருவரை swap செய்து வீட்டிற்கு வெளியே கார்டன் ஏரியாவில் தூங்கிவரும் ஒருவரை தன்னுடைய அணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி ஜி பி முத்துவை காரணத்துடன் அணியிலிருந்து swap செய்து மற்றொரு நபரை தன்னுடைய அணிக்கு எடுத்து இருக்கின்றார். இதனால் கடுப்பான ஜி பி முத்து நான் என்ன வேலை செய்யவில்லை என கேட்டு இருக்கின்றார் இதனால் வீட்டிற்குள் சற்று பிரச்சனை வெடித்துள்ளது. ஏனென்றால் இதன் மூலமாக அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனுக்கு சென்றுள்ளார் ஜி பி முத்து இனி என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக பார்ப்போம்.