Categories
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் செய்ய இணையதள வசதி…. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

விவசாயிகள் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏற்றவாறு இணையத்தில் பதிவு செய்து கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யலாம். அதற்காக இணையதள வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுடைய பெயர், ஆதார் எண், சர்வே எண், வங்கி கணக்கு எண், போன்ற விவரங்களை எளிய முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதன்பின் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்ய ஏற்றவாறு அதில் சில  வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி WWW.TNCSC.TN.GOV.IN மற்றும் WWW.TNCSC-EDPC.IN போன்ற இணையதளத்தில் பதிவு செய்தபின் விவசாயிகளின் நிலம் இருக்கும் கிராமங்களை அடிப்படையாகக்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதற்கேற்றவாறு ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றது.இணைய த்தின் மூலமாகவும் கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்களை விவசாயிகளின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட உள்ளன. அந்த செய்தியின் அடிப்படையில் வெகுநேரமாக காத்திருக்காமல் உரிய காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யலாம் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கூறியுள்ளது.

Categories

Tech |