Categories
தேசிய செய்திகள்

நேரடி பிரச்சாரத்திற்கு தடை நீட்டிப்பு….!! வேட்பாளர்களுக்கு தொடரும் சிக்கல்….!!

வேட்பாளர்களுக்கு நேரடித் தேர்தல் பிரச்சாரத்திற்கான தடை மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதிகளை கடந்த 8ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நேரடியாக செய்யப்படும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டதுஇதனால் பொதுக்கூட்டங்கள், சாலைவழி பிரச்சாரம், பாத யாத்திரை, சைக்கிள்/ பைக்/ வேறு வாகனங்களில் பேரணி செல்லுதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டன.

நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கையாக தடையை நீட்டிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேரடியாக செய்யும் பிரச்சாரங்களுக்கு வரும் 22ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேசமயம் உள்ளரங்க ஆலோசனைக் கூட்டங்களில் அதிகபட்சமாக 300 பேர் அல்லது 50 சதவீதம் பேர் மட்டும் பங்கேற்கலாம் என்ற தளர்வும் அறிவிக்கபப்ட்டுள்ளது.ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்தும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக கருதி பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்திருந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் 2 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடத்தப்படுகிறது.

Categories

Tech |