நேரடி போட்டி தேர்வுகளுக்கு 2ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தேர்வர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் அரசு அறிவித்த இந்த வயது வரம்பு சலுகை முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு அமல்படுத்தாதன் காரணமாக தேர்வர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் உடனடியாக 2 ஆண்டுகள் கால அவகாசத்தை முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதக்கூடிய அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு தேவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.