Categories
உலக செய்திகள்

“நேரம் காட்டும் தண்ணீர்”… கண்ணை கவரும் ஜப்பான் டெக்னாலஜி….!!!!

உலகத்தில் தண்ணீர் என்பது அனைவருக்குமே அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு தண்ணீர் இல்லையெனில் எதுவுமே இல்லை என்று கூட சொல்லலாம். அதிலும் குறிப்பாக குடிப்பதற்கு தண்ணீரின்றி நம்மால் வாழவே முடியாது. ஆனால் ஜப்பான் காரர்கள் நிறைய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பது போன்று தற்போது புதிதாக ஒன்றை கண்டறிந்துள்ளனர். அது என்னவென்றால் ஜப்பான் காரர்கள் தண்ணீரை நேரம் பார்ப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

ஜப்பான் நாட்டில் ஒசாகா என்ற ஊரில் ஒசாகா ஸ்டேஷன் சிட்டி என்ற ஒரு மால் இருக்கிறது. அந்த மாலில்தான் வாட்டர் கிளாக் உபயோகித்து வருகிறார்கள். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சம் இடைவெளிவிட்டு ட்ராப் ட்ராப் ஆக விடும்போது நேரம் காட்டும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அவ்வாறு நேரம் மட்டுமல்லாது அவர்களுடைய ஊரின் பெயர், அவர்களின் ஊருக்கு யாராவது வந்தால் கவரவிப்பதற்கு அவர்களின் பெயர், மேலும் டிசைன் வரவைக்க முடியும் என்று ஜப்பான் காரர்கள் சொல்கிறார்கள்.

Categories

Tech |