தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரளவு மேகமூட்டம், லேசான, முதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது. இந்நிலையில் 7.20க்குள் 6 மாவட்டங்களில் மழை இன்று காலை 7.20 மணிக்குள் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமானமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று முதல் டிச.29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமானமழை பெய்யக்கூடும். டிச.30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.