அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.
அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்றார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் பின்னர் நாட்டு மக்களுக்கு நீண்ட உரையாற்றிய ஜோ – பைடன், தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் தான் இன்று உடனே ஓவல் அலுவலகத்திற்கு செல்கின்றேன். அமெரிக்க குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைகளை தொடங்க இருக்கின்றேன் என ட்விட் செய்துள்ளார்.
There is no time to waste when it comes to tackling the crises we face. That's why today, I am heading to the Oval Office to get right to work delivering bold action and immediate relief for American families.
— President Biden (@POTUS) January 20, 2021