Categories
உலக செய்திகள்

நேரலையில் செய்தி வாசிக்கும் போது….. “பூச்சியை விழுங்கிய தொகுப்பாளர்”….. வீடியோ வைரல்….!!!!

கஷ்டம், துன்பம் மற்றும் சோகம் போன்ற காலங்களில் சிரிக்க வழிகளை மக்கள் அடிக்கடி தேடுகிறார்கள். இப்படி ஒரு வேடிக்கையான வீடியோவை ஒரு பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், செய்தியை வாசிக்கும் போது தொகுப்பாளர் ஒருவர் பூச்சியை விழுங்கியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை டொராண்டோவைச் சேர்ந்த பராஹ் நாசர் என்ற பத்திரிகையாளர் ட்வீட் செய்துள்ளார். “இந்த இக்கட்டான காலங்களில் நாம் அனைவரும் சிரிக்க வேண்டும். அதனால் தான் இந்த வீடியோ பகிரப்படுகிறது. இன்று நேரலையில் செய்தி வாசிக்கும் போது ஒரு பூச்சியை விழுங்கினேன். இன்றைய முக்கிய நிகழ்வை உலகுக்கு தெரிவிக்கவே இந்தப் பூச்சி வந்தது.’ என ஃபரா நாசர் இந்த வீடியோவுடன் குறிப்பைச் சேர்த்துள்ளார்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான செய்திகளை வாசிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில், ஃபரா தனது வாய்க்குள் நுழைந்த ஒரு பூச்சியால் சில அசௌகரியங்களை சந்திக்கிறார். பின்னர் தொடர்ந்து அவரது வேலையை செய்கிறார். இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து ரீட்வீட் செய்துள்ளனர். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும், பணியை திறம்பட முடித்த பத்திரிகையாளரை பலரும் பாராட்டினர்.

Categories

Tech |