Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார்…. அசத்தும் போலீஸ் சூப்பிரண்டு….. குவியும் பாராட்டு…!!

முதியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரிடம் புகார் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏராளமான மக்கள் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அதில் முதியவர்களும் இருந்தனர். இதையறிந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று முதியவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு முதியவர்களிடம்  நேரடியாக மனு கொடுப்பதற்கு வர வேண்டாம் எனவும்,  வீட்டில் இருந்தபடியே 04652 220167 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் ஹரிகிரண் பிரசாத் கூறினார். இதனையடுத்து வீட்டில் இருந்து புகார்  அளிக்கப்பட்டவுடன் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் போலீஸ் சூப்பிரண்ட்டின் இந்த நடவடிக்கைகள் பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ‌

Categories

Tech |