கார் விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் உள்ள கிருஷ்ணன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இவருடன் முரளி, சாந்தி ஆகியோரும் காரில் சென்றனர். இந்த கார் பாண்டியன் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் கண்ணனின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கிய கண்ணன், சாந்தி, முரளி, கார்த்திக் ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.