மகாராஷ்டிரா மாநிலத்தில் நேருக்கு நேர் லாரி மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் நகரின் புறநகர் பகுதியில் டீசல் ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரியும், மரம் ஏற்றி சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏற்பட்ட தீ காரணமாக 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று இரவு 10 மணி அளவில் சந்திராபூர் சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சந்திராபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.