Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நேருக்கு நேர் மோதல்” சுக்குநூறாக நொறுங்கிய 2 லாரிகள்….. 2 டிரைவர்கள் பலி…. கோவையில் சோகம்…!!

கோவை அருகே 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 டிரைவர்களும் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றைய தினம் தனது லாரியில் ஐஸ்கிரீம் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி சென்று பின் ஐஸ்கிரீம் கம்பெனிகளில் பெட்டிகளை அடுக்கி வைத்துவிட்டு கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று மணிகண்டன் லாரியின் மீது மோதியது. இதில் இரண்டு லாரிகளின்  முன் பகுதிகளும் சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் 2 டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |