Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. மதுரையில் கோர விபத்து…!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாவூர்சத்திரத்தில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிவந்த லாரி விக்னேஷின் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லாரிகளின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக விக்னேஷ் மற்றும் மற்றொரு லாரியின் ஓட்டுநர் தினேஷ்குமார் ஆகிய இருவரும் உயிர் தப்பிவிட்டனர். ஆனால் இந்த விபத்தில் லாரியில் இருந்த அனைத்து முட்டைகளும் உடைந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |