மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஸ்வநாதபுரம் பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பாலகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.