Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனி பகுதியில் நிதோன் சித்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், சோபி என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கோடிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கொட்டில்பாடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சித்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் சோபி, சித்ராஜ் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பிரவின் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சித்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு சோபி மற்றும் பிரவின் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |