அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் இருந்து அரசு பேருந்து சேக்கல் முடி எஸ்டேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி மற்றொரு அரசு பேருந்து வந்தது. இந்த பேருந்துகள் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வால்பாறை- சோலையார் அணை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.