நேருக்கு நேர் கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவியும், ஜெயஷர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு கேரளாவில் இருந்து காரில் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்த கார் ஆரல்வாய்மொழி அருகே சென்ற போது எதிரே வந்த கார் ஈஸ்வரனின் காரின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் 2 கார்களின் முன் பக்கமும் சேதமடைந்தது. இந்த பயங்கர விபத்தில் காரில் வந்த ஈஸ்வரன், வித்யா, ஜெயஷர்ஷினி ஆகியோருக்கும் மற்றொரு காரில் வந்த கௌசிகா, கார்வண்ணன், விஜய் அம்பிகா ஆகிய 6 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.