சேலத்தில் நேருக்கு நேர் மோதிய கார் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்களான செல்வராகவன் (25) குமார் ராஜா (21). இவர்கள் மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அங்கு அம்மனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஜலகண்டாபுரம் நோக்கி அவர்கள் மூன்று பேரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர் காரை மாணிக்கம் ஒட்டி உள்ளார்.
இதேபோல் தாளவாடியை சேர்ந்த மகேஷ், பசுவராஜ், சையதுல்லா போன்ற மூன்று பேரும் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் காரை மகேஷ் ஒட்டியுள்ளார். இந்த நிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மாணிக்கத்தின் காரும் மகேஷின் காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இரண்டு கார்களில் இருந்து ஆறு பேரும் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து ஏற்பட்டதும் மகேஷின் கார் திடீரென தீப்பிடித்து ஏறிந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எந்த தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் தீ விபத்தில் கார் முற்றிலும் இருந்து நாசமானது. இதற்கு இடையே காயம் அடைந்த ஆறு பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.