இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் நூல் மில் மேற்ப்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூல் மில்லில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜமுனாதேவி என்ற எண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து 2 இருசக்கர வாகனங்களுக்கு திடீரென நிலை தடுமாறி நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் விக்னேஷ் மற்றும் ஆனந்தன் படுகாயமடைந்த நிலையில் ஜமுனாதேவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனைதொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக படுகாயமடைந்த 2 பேரையும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் விக்னேஷை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.