Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நேருக்கு நேர் மோதிய பைக்…. பரிதாபமாக பலியான வாலிபர்..!!

வளவனூர் அருகில் பைக் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா தட்டாஞ்சாவடியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக். இவருடைய மகன் அப்துல் ஹமீது (30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் வேலைக்காக, மோட்சகுளம் கொங்கம்பட்டு  சாலையில் சென்றார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் வாகனம் இவரது பைக்கில் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ஹமீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்துல் ரசாக் வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |