Categories
ஈரோடு மாவட்ட செய்திகள் விபத்து

நேருக்கு நேர் மோதிய மொபட்-லாரி… தூக்கி வீசப்பட்ட மாணவன்…. நேர்ந்த சோக முடிவு…!!

லாரி-மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்உயிரிலாண்டித சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் தினேஷ்குமார் (19), மகள் அனுசியா. தினேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் தினேஷ்குமார் கரூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் அருகே சின்னப்பையன் புதூர் என்ற இடத்தில் சென்றபோது தினேஷ்குமார் மொபட்டும், அந்த வழியாக வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் தினேஷ்குமார் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்ததும் டிரைவர் நிற்காமல் லாரியில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தினேஷ்குமாரை பரிசோதித்துவிட்டு் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொடுமுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Categories

Tech |