மொபட் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள எலந்தகுட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கிழக்கு தொட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த முருகேசன் என்பவரின் மொபட் எதிர்பாராதவிதமாக சுரேஷின் மொபட் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேலும் முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையறிந்த பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.