மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியரான ரத்தினவேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ரத்தினவேல் மோட்டார் சைக்கிளில் குருக்கள்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த ரத்தினவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரத்தினவேல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.