இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் கோலாலம்பூர் பகுதியில் இருக்கும் klcc ரயில் நிலையத்திற்கு அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Wee Ka Siong கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் “இந்த விபத்து ஏற்படும்போது ஒரு ரயில் 20 கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றொரு ரயில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் ஒரே தண்டவாளத்தில் வந்திருக்கிறது. மேலும் விபத்து ஏற்பட போகிறது என்பதை அறிந்தவுடன் சில பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து வெளியேற முயற்சித்துள்ளனர். இதனாலேயே அவர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.