மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் காஜா அலாவுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னவராயன்கோட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஜா அலாவுதீன் கடையில் டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது துவரங்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காஜா அலாவுதீனின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காஜா அலாவுதீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.