Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. பரிதாபமாக பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஹோட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எம்.லட்சுமிபுரத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் அருகே உள்ள கானாவிலக்கு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அய்யனார் கோவில் பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக திடீரென மணிகண்டன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த கமுதி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |